/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த பணி ஆக., 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த பணி ஆக., 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த பணி ஆக., 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த பணி ஆக., 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த பணி ஆக., 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 27, 2024 11:49 PM
திருப்பூர்;மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள, 36 பணியிடங்களில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விரும்புவோர், ஆக., 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆயுஷ் மற்றும் தேசிய சுகாதார திட்டத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 36 பணியிடங்கள், மாவட்ட நலச்சங்கம் மூலமாக, ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
பல் மருத்துவர் - 5, பல் மருத்துவ உதவியாளர் -6, டிரைவர் -1, செவிலியர் - 9, 'ஆடியோலிஜிஸ்ட்', ஆடியோமெட்ரீசியன், மருந்தாளுனர், ஆயுஷ் டாக்டர் -2, சித்தா டிஸ்பென்சர் -2, 'தெராபெட்டிக்'ஆண் உதவியாளர், இதர பணிகளுக்கான பணியாளர் -7 என, 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விரும்புவோர், வரும் ஆக., 9 ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை, 'நிர்வாக செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலச்சங்கம், 147, பூலுவபட்டி பிரிவு, நெரிப்பெரிச்சல் ரோடு, திருப்பூர் -641 602' என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு, https://tiruppur.nic.in/notice category/recruitment என்ற வலைதள முகவரியை தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.