/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பஸ்சில் கையை அறுத்து கொண்ட வாலிபர் காதலியை 'சாந்தப்படுத்த' ரத்தம் காட்டி 'வீரம்' பஸ்சில் கையை அறுத்து கொண்ட வாலிபர் காதலியை 'சாந்தப்படுத்த' ரத்தம் காட்டி 'வீரம்'
பஸ்சில் கையை அறுத்து கொண்ட வாலிபர் காதலியை 'சாந்தப்படுத்த' ரத்தம் காட்டி 'வீரம்'
பஸ்சில் கையை அறுத்து கொண்ட வாலிபர் காதலியை 'சாந்தப்படுத்த' ரத்தம் காட்டி 'வீரம்'
பஸ்சில் கையை அறுத்து கொண்ட வாலிபர் காதலியை 'சாந்தப்படுத்த' ரத்தம் காட்டி 'வீரம்'
ADDED : ஜூலை 27, 2024 11:49 PM
அவிநாசி;பஸ்சுக்குள் தனது கையை பிளேடால் வாலிபர் அறுத்து கொண்டார். ரத்தம் பீறிட்டதை பார்த்து பயணிகள் அலறினர். ஒரு வழியாக போலீசார் சமரசம் செய்து, அனுப்பி வைத்தனர்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் 17 வயது மகள், பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, திருமுருகன்பூண்டியிலுள்ள தனது மாமா வீட்டில் வசித்து வந்தார். அதே பகுதியில், புதுக்கோட்டையை சந்தோஷ், 24 என்பவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சந்தோஷ் சிறுமியை காதலித்துள்ளனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முயற்சித்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் சந்தோஷ் மீது சிறுமியை கடத்த முயன்றதாக போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதனால், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தோஷ் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இதையறிந்த அந்த சிறுமி சந்தோஷை சந்திக்க கோவை சென்றதோடு, அவருடன் தான் வாழ்வேன் என அடம்பிடித்துள்ளார்.
இதனை பார்த்து திகைத்த சந்தோஷ், சிறுமியை சமாதானம் செய்து, 18 வயது பூர்த்தியாகும் வரை பொறுமையாக இருக்க சொல்லி அறிவுரை கூறி சிறுமியை கோவையில் உள்ள பெற்றோர் வீட்டிலேயே விடுவதற்காக திருப்பூரில் இருந்து கோவைக்கு அரசு பஸ்சில் கூட்டி வந்துள்ளார்.
பஸ்சில் ஏறியதில் இருந்து பெற்றோர் வீட்டுக்கு செல்ல மறுத்து சிறுமி தொடர்ந்து அடம்பிடித்துள்ளார். சந்தோஷ் அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் வந்த போது, சிறுமியை சமாதானம் செய்ய தான் வைத்திருந்த பிளேடால் தனது கையை கீறி கொண்டார். இதனை கண்ட மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். உடனே, நடத்துனர் அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் இருவரையும் ஒப்படைத்தார்.
அவிநாசி அனைத்து மகளிர் போலீசார் சிறுமிக்கு அறிவுரை கூறி காயம் பட்ட சந்தோஷத்துக்கு முதலுதவி அளித்து அனுப்பி வைத்தனர். சிறுமியின் பெற்றோர் சென்னையில் இருப்பதால் அவர்கள் வரும் வரை சிறுமியை போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும், பெற்றோர் வந்ததும் அவருடன் அனுப்பி வைப்பதாக போலீசார் தெரிவித்தனர்.