/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மீண்டும் பிரதமராக மோடி பா.ஜ.,வினர் கொண்டாட்டம் மீண்டும் பிரதமராக மோடி பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
மீண்டும் பிரதமராக மோடி பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
மீண்டும் பிரதமராக மோடி பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
மீண்டும் பிரதமராக மோடி பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
ADDED : ஜூன் 10, 2024 02:15 AM

திருப்பூர்;மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றதை திருப்பூர் மாநகரில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி பா.ஜ.,வினர் கொண்டாடினர்.
பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக நேற்று பதவியேற்று கொண்டார். இதை நாடு முழுக்க உள்ள பா.ஜ., வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அவ்வகையில், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப், அங்கேரிபாளையம், வேலம்பாளையம், பெருமாநல்லுார் நால் ரோடு, ஓடக்காடு, கொங்குநகர், தாராபுரம் ரோடு என, ஏழு இடங்களில் பா.ஜ., வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண் டாடினர்.
தொடர்ந்து, மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியை மாவட்ட அலுவலகம், மண்டலம் அலுவலகங்களில் மக்கள் பார்க்கும்படி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்தனர்.
மாநகராட்சி 14வது வார்டு
மாநகராட்சி, 14வது வார்டு பா.ஜ.,வினர் நேற்று பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினர். மண்டல செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி பிரிவு செயலாளர் அன்னைகுமார், சிந்தனை பிரிவு செயலாளர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவிநாசி
அவிநாசி நகர பா.ஜ., சார்பில் நகரத் தலைவர் தினேஷ்குமார் தலைமையில் சூளை பஸ் ஸ்டாப், சிந்தாமணி பஸ் ஸ்டாப், தாலுகா ஆபீஸ் பஸ் ஸ்டாப், பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
மாவட்டத் துணைத் தலைவர் சண்முகம், பாராளுமன்ற இணை பொறுப்பாளர் கதிர்வேல் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.