/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தி.மு.க., கூட்டணியினர்... கொண்டாட்டம் மீண்டும் வசமானது தொகுதி தி.மு.க., கூட்டணியினர்... கொண்டாட்டம் மீண்டும் வசமானது தொகுதி
தி.மு.க., கூட்டணியினர்... கொண்டாட்டம் மீண்டும் வசமானது தொகுதி
தி.மு.க., கூட்டணியினர்... கொண்டாட்டம் மீண்டும் வசமானது தொகுதி
தி.மு.க., கூட்டணியினர்... கொண்டாட்டம் மீண்டும் வசமானது தொகுதி
ADDED : ஜூன் 05, 2024 12:38 AM
திருப்பூர்;திருப்பூர் லோக்சபா தொகுதியில், இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் அமோக வெற்றி பெற்றார். தி.மு.க., கூட்டணியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
திருப்பூர் லோக்சபா தொகுதியில், சுப்பராயன்(இந்திய கம்யூ.,), அருணாச்சலம்(அ.தி.மு.க.,), முருகானந்தம்(பா.ஜ.,), சீதாலட்சுமி(நாம் தமிழர்) உள்ளிட்ட 13 வேட்பாளர்கள் களம் கண்டனர்.
நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே, சுப்பராயன் முன்னிலையில் இருந்தார். அனைத்து சுற்றுகளின் போதும், ஒவ்வொரு முறையும் எண்ணிக்கை மற்றும் முன்னணி நிலவரம் வெளியிடப்பட்டது. ஓட்டு வித்தியாசம் அதிகரித்துக்கொண்டே வந்தது.
28 சுற்றுகள் முடிவில், சுப்பராயன் 4, 70, 195 ஓட்டுகள், அருணாசலம் 3,45,326 ஓட்டுகள், முருகானந்தம் 1,84, 066 ஓட்டுகள், சீதாலட்சுமி 95, 250 ஓட்டுகள் பெற்றிருந்தனர். இறுதிச்சுற்றில் சுப்பராயன், அருணாச்சலத்தை விட 1,24, 869 ஓட்டுகள் கூடுதலாக பெற்றிருந்தார்.
திருப்பூர் நகரின் பல்வேறு இடங்களில் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
வெற்றி சாத்தியமானதுஎப்படி?
'சிட்டிங்' எம்.பி.,யான சுப்பராயனே வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், துவக்கத்தில் அதிருப்தி தென்பட்டாலும், அதைச் சரிக்கட்டினார். தி.மு.க.,வினர் களமிறங்கி வேலைபார்க்க கட்சித்தலைமை அறிவுறுத்தியது. முதல்வர் ஸ்டாலின் உள்பட கூட்டணிக்கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டனர். இறுதியில் ஆரவாரம் இன்றி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டார் சுப்பராயன்.