ADDED : ஜூன் 04, 2024 01:02 AM
திருப்பூர்:திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில், நேற்று மாலை, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பணியை முடித்த மினி பஸ் நடத்துனர்கள், இருவர் மதுபோதையில், கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதனை பார்த்து, பயணிகள் தெறித்து ஓடினர். ஒரு கட்டத்துக்கு மேல், மற்ற டிரைவர்கள், இருவரையும் விலக்கினர்.
இந்த சண்டையை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.