/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'ராட்வீலர்' நாய் கடித்து சிறுவன் பாதிப்பு 'ராட்வீலர்' நாய் கடித்து சிறுவன் பாதிப்பு
'ராட்வீலர்' நாய் கடித்து சிறுவன் பாதிப்பு
'ராட்வீலர்' நாய் கடித்து சிறுவன் பாதிப்பு
'ராட்வீலர்' நாய் கடித்து சிறுவன் பாதிப்பு
ADDED : ஜூன் 23, 2024 01:40 AM
பல்லடம்;பல்லடம் அடுத்த சேடபாளையத்தை சேர்ந்த மந்திரகிரி -- ஷில்பாஸ்ரீ தம்பதி மகன் இஷாந்த் அபிநந்த், 4. நேற்று முன்தினம், இவர் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகில் உள்ள மளிகைக்கடை உரிமையாளர் ஒருவரின் மூன்று வயது ராட்வீலர் நாய், அபிநந்த்தை கடித்துக் குதற முயற்சித்தது.
இதில், சிறுவனின் காலில் சிராய்ப்பு ஏற்பட்டது. கீழே விழுந்த சிறுவன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு, பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.