/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளியில் புத்தகத் திருவிழா துவங்கியது ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளியில் புத்தகத் திருவிழா துவங்கியது
ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளியில் புத்தகத் திருவிழா துவங்கியது
ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளியில் புத்தகத் திருவிழா துவங்கியது
ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளியில் புத்தகத் திருவிழா துவங்கியது
ADDED : ஜூன் 27, 2024 11:02 PM

திருப்பூர் : வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புத்தகத் திருவிழா துவங்கியது.
கண்காட்சியை பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி துவக்கி வைத்தார். அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகாவாணி சதீஷ், சுருதி ஹரீஸ், பள்ளி முதல்வர் மணிமலர் ஆகியோர் உடன் இருந்தனர். ஸ்ரீ ராம கிருஷ்ணா மிஷன் வித்யாலயா பதிப்பகம், நியுசெஞ்சுரி புக் ஹவுஸ், மகேஸ்வரி புக் ஸ்டால், சோழா புக் ஹவுஸ், பின்னல் என பல்வேறு பதிப்பகங்கள் கலந்து கொண்டுள்ளன. வரும் 29ம் தேதி வரை நடைபெறுகிறது.
''இந்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவி மேகா பிரியதர்ஷினி எழுதிய நுால்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன'' என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.