/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிக்கண்ணா கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கவுன்சிலிங் சிக்கண்ணா கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கவுன்சிலிங்
சிக்கண்ணா கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கவுன்சிலிங்
சிக்கண்ணா கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கவுன்சிலிங்
சிக்கண்ணா கல்லுாரியில் நாளை 3ம் கட்ட கவுன்சிலிங்
ADDED : ஜூன் 27, 2024 11:01 PM
திருப்பூர் : சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் இளங்கலை பட்ட வகுப்புகளில் சேர, நாளை (29ம் தேதி) மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது.
கல்லுாரியில் மொத்த இடங்கள், 808. முதல் கட்ட கவுன்சிலிங்கில், 570 இடங்கள் நிரம்பின. கடந்த 24ல் துவங்கிய, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் நேற்று வரை, 185 இடங்கள் நிரம்பியுள்ளன.
அறிவியல் பாடப் பிரிவில், வேதியியல் - பத்து, இயற்பியல் - ஆறு, கணினி அறிவியல் - ஒன்பது, கணிதத்தில், 28 இடங்கள் உள்ளிட்ட மொத்தம், 116 இடங்கள் காலியாக உள்ளது.
வரும், 29ம் தேதி மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நடக்கவுள்ளது. இப்பாடப்பிரிவில் ஏற்கனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள், முந்தைய கவுன்சிலிங்கில் பங்கேற்காதவர்கள் நாளைய கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். இத்தகவலை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.