/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பைக்குகள் மோதல்; போலீஸ்காரர் காயம் பைக்குகள் மோதல்; போலீஸ்காரர் காயம்
பைக்குகள் மோதல்; போலீஸ்காரர் காயம்
பைக்குகள் மோதல்; போலீஸ்காரர் காயம்
பைக்குகள் மோதல்; போலீஸ்காரர் காயம்
ADDED : ஜூன் 05, 2024 11:08 PM

அனுப்பர்பாளையம் : பெருமாநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வருபவர் ஆனந்தன். நேற்று மாலை பைக்கில் கணக்கம்பாளையத்தில் இருந்து பெருமாநல்லுார் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பொங்குபாளையம் பிரிவு அருகே சென்றபோது, நிலை தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த பைக் மீது மோதினார். இதில், ஆனந்தன் மற்றும் இன்னொரு பைக்கில் சென்று கொண்டிருந்த போயம்பாளையம் நந்தா நகரை சேர்ந்த ரவி, அவரது நண்பர் ரவிச்சந்திரன் என மூன்று பேர் காயம் அடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.