/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாகுபலி பொருட்காட்சி ; 17ம் தேதி நிறைவு பாகுபலி பொருட்காட்சி ; 17ம் தேதி நிறைவு
பாகுபலி பொருட்காட்சி ; 17ம் தேதி நிறைவு
பாகுபலி பொருட்காட்சி ; 17ம் தேதி நிறைவு
பாகுபலி பொருட்காட்சி ; 17ம் தேதி நிறைவு
ADDED : ஜூன் 08, 2024 11:35 PM
திருப்பூர்:திருப்பூர், காங்கயம் ரோடு, பத்மினி கார்டனில், பிரகல்யா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், பாகுபலி கோட்டை மற்றும் பொருட்காட்சி, கடந்த இரண்டு மாதங்களாக நடந்தது.
தினமும் மாலை, 4:00 மணி முதல், இரவு 11:00 மணி வரை களைகட்டியிருக்கிறது. பாகுபலி திரைப்படத்தில் வரும் காட்சிகளை நேரில் காண்பது போன்ற, பிரமாண்டமான பாகுபலி கோட்டை, அரியாசனம் காட்சிகளை பார்க்கலாம். தொடர்ந்து, வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும், வாங்கிட 20க்கும் மேற்பட்ட கடைகள். சிறுவர்கள் விளையாடி மகிழும் கேம்கள், பெரிய ராட்டினங்கள், டில்லி அப்பளம் உள்ளிட்ட சிற்றுண்டி வகைகள் என, விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
தேர்த்திருவிழாவில் அமைக்கப்படும் கடை வீதியை சுற்றிப்பார்த்து கொண்டாடியது போன்ற உற்சாகம் ஏற்படுவதால், திருப்பூர் மக்கள் மகிழ்ச்சியாக பொருட்காட்சிக்கு செல்கின்றனர். வரும், 17ம் தேதியுடன், பொருட்காட்சி நிறைவு பெறுவதாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.