/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாற்றுத்திறனாளி நலனுக்கு பணிபுரிந்தோருக்கு விருது மாற்றுத்திறனாளி நலனுக்கு பணிபுரிந்தோருக்கு விருது
மாற்றுத்திறனாளி நலனுக்கு பணிபுரிந்தோருக்கு விருது
மாற்றுத்திறனாளி நலனுக்கு பணிபுரிந்தோருக்கு விருது
மாற்றுத்திறனாளி நலனுக்கு பணிபுரிந்தோருக்கு விருது
ADDED : ஜூலை 02, 2024 11:39 PM
திருப்பூர்:மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தோருக்கு, தமிழக அரசால், ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது விருது வழங்கப்பட்டுவருகிறது.
வரும் ஆக., 15ம் தேதி சுதந்திர தின விழாவில், முதல்வரால் விருது வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை செய்த தொண்டு நிறுவனத்துக்கு தங்க பதக்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், சிறந்த மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கிய தனியார் நிறுவனம், சிறந்த சமூக பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக கடன் வழங்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த நிறுவனங்கள், https://awards.tn.gov.in என்கிற இணையதளத்தில், வரும் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.