/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு ஐ.டி.ஐ.,-ல் சேர விண்ணப்பிக்கலாம் அரசு ஐ.டி.ஐ.,-ல் சேர விண்ணப்பிக்கலாம்
அரசு ஐ.டி.ஐ.,-ல் சேர விண்ணப்பிக்கலாம்
அரசு ஐ.டி.ஐ.,-ல் சேர விண்ணப்பிக்கலாம்
அரசு ஐ.டி.ஐ.,-ல் சேர விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 02, 2024 11:40 PM
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், தாராபுரம், உடுமலையில் இயங்கிவரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், ஒன்பது, பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தவறியவர்களும் தொழிற்கல்வியில் சேர விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ.,-ல் படிப்போருக்கு, 100 சதவீத வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது.
கல்வி கட்டணம் இலவசம், மாதாந்திர உதவித்தொகை மாதம், 750 ரூபாய், இலவச பஸ்பாஸ், சைக்கிள், பாட உபகரணங்கள், சீருடை வழங்கப்படுகிறது. மாணவியருக்கு, புதுமைப்பெண் திட்டத்தில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். தொழிற்பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவியர், 99428 11559, 86680 41629, 99442 06017 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.