/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஏ.டி.எம்., உடைத்து திருட முயற்சி; பா.ஜ., முன்னாள் நிர்வாகி கைது ஏ.டி.எம்., உடைத்து திருட முயற்சி; பா.ஜ., முன்னாள் நிர்வாகி கைது
ஏ.டி.எம்., உடைத்து திருட முயற்சி; பா.ஜ., முன்னாள் நிர்வாகி கைது
ஏ.டி.எம்., உடைத்து திருட முயற்சி; பா.ஜ., முன்னாள் நிர்வாகி கைது
ஏ.டி.எம்., உடைத்து திருட முயற்சி; பா.ஜ., முன்னாள் நிர்வாகி கைது
ADDED : ஜூலை 29, 2024 11:12 PM

திருப்பூர் : திருப்பூர், அனுப்பர்பாளையத்தில் ஏ.டி.எம்., மையம் உள்ளது. கடந்த 20ம் தேதி மையத்துக்குள் நுழைந்த ஒருவர், மெஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார்.
நீண்ட நேரமாகியும், மெஷினை உடைக்க முடியாமல் அங்கிருந்து தப்பினார். 'சிசிடிவி' காட்சிகளின் அடிப்படையில், அந்த நபர், அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், 54, என்பது தெரிந்தது.
இவர், தி.மு.க., - பா.ஜ., கட்சிகளில் நிர்வாகியாக இருந்தவர். அவரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
அவர் குறித்து, திருப்பூர் மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்வேல் அறிக்கை:
முருகானந்தம் தி.மு.க.,வில் இருந்து சமீபத்தில் தான் பா.ஜ.,வுக்கு வந்தார். அவருக்கு கட்சி பொறுப்பு வழங்கப்பட்டது. இரு முறை அவருக்கு திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டும், நடவடிக்கையை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.
எனவே, கடந்த மாதம் 23ம் தேதி, கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டு விட்டார்.