/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அமராவதிநகர் சைனிக் பள்ளி நிர்வாக குழு கூட்டம் அமராவதிநகர் சைனிக் பள்ளி நிர்வாக குழு கூட்டம்
அமராவதிநகர் சைனிக் பள்ளி நிர்வாக குழு கூட்டம்
அமராவதிநகர் சைனிக் பள்ளி நிர்வாக குழு கூட்டம்
அமராவதிநகர் சைனிக் பள்ளி நிர்வாக குழு கூட்டம்
ADDED : ஜூன் 28, 2024 11:58 PM

உடுமலை:உடுமலை அமராவதிநகர் சைனிக் பள்ளி நிர்வாக குழு கூட்டம் நடந்தது.
உடுமலை அருகே அமராவதிநகரில், இந்திய ராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் சைனிக் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியின், மாணவியர் விடுதி திறப்பு மற்றும் நிர்வாகக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
இப்பள்ளியில் 128வது நிர்வாகக்குழு கூட்டத்திற்கு பள்ளி முதல்வர் கேப்டன் மணிகண்டன் வரவேற்றார். தெற்கு கடற்படை தளபதி, சைனிக் பள்ளி நிர்வாக குழு தலைவர் வைஸ் அட்மிரல் சீனிவாஸ் தலைமை வகித்தார்.
தொடர்ந்து மாணவர்கள் இசைக்குழுவுடன் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். பின்னர் சைனிக் பள்ளியில் உள்ள, 3.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ராணி வேலுநாச்சியார் பெண்கள் விடுதியை திறந்து வைத்தார்.
இந்த விடுதியில், 80 மாணவியர் தங்கக்கூடிய வசதிகள் உள்ளன. இந்த கூட்டத்தில், பள்ளியின் மேம்படுத்தபட வேண்டிய வசதிகள் குறித்தும், தற்போது உள்ள பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, பள்ளியின் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும், மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடப்பட்டது.
கூட்டத்தில் பெற்றோர், பள்ளி முன்னாள் மாணவர்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.