/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மானாவாரியாக எள் சாகுபடி மழை சீசனில் ஆர்வம் மானாவாரியாக எள் சாகுபடி மழை சீசனில் ஆர்வம்
மானாவாரியாக எள் சாகுபடி மழை சீசனில் ஆர்வம்
மானாவாரியாக எள் சாகுபடி மழை சீசனில் ஆர்வம்
மானாவாரியாக எள் சாகுபடி மழை சீசனில் ஆர்வம்
ADDED : ஜூலை 27, 2024 02:17 AM
உடுமலை;உடுமலை சுற்றுப்பகுதிகளில், வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைக்காலங்களில், மானாவாரியாக, சோளம், மக்காச்சோளம், எள் உட்பட பல்வேறு தானியங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, மானாவாரியாக, செம்மண் மற்றும் களிமண் நிலங்களில், பரவலாக எள் சாகுபடி செய்யப்படுகிறது.
நல்லெண்ணெய் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதால், எள்ளுக்கு, அதிக தேவை உள்ளது. ஆனால், இறவை பாசனத்தில், எள் குறைவாகவே சாகுபடி செய்யப்படுகிறது.
சாகுபடியில், 90 - -110 நாட்களில், அறுவடை செய்து, எள்ளை பிரித்தெடுக்கின்றனர். இதனால், ஆண்டு முழுவதும், எள்ளுக்கு கிராக்கி உள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'எள் சாகுபடியில், இடுபொருள் உட்பட சாகுபடி செலவு குறைவாகவே பிடிக்கிறது. வழக்கமாக, ஏக்கருக்கு, 80 கிலோ கொண்ட, 5 மூட்டை, வரை மகசூல் விளைச்சல் கிடைக்கும். நடப்பாண்டு, நல்ல மகசூல் மற்றும் தேவை அதிகரிப்பால் விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்,' என்றனர்.