ADDED : ஜூன் 10, 2024 02:16 AM

பல்லடம் அடுத்த, ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகரில், அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பகுதி பஸ் ஸ்டாப் நிழற்குடை, சமூக விரோதிகளால், தற்போது திறந்த வெளி மதுக்கூடமாக மாறி உள்ளது. நிழற்குடைக்குள், மது பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் நிழற்குடையை பயன்படுத்துவர். சமூக விரோதிகளின் பிடியில் உள்ள நிழற்குடையை மீட்டு மது பாட்டில்களை அப்புறப்படுத்துவதுடன், நிழற்குடையை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.