/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மொபைல் போன் டவர் மீது இடி விழுந்து தீ விபத்து மொபைல் போன் டவர் மீது இடி விழுந்து தீ விபத்து
மொபைல் போன் டவர் மீது இடி விழுந்து தீ விபத்து
மொபைல் போன் டவர் மீது இடி விழுந்து தீ விபத்து
மொபைல் போன் டவர் மீது இடி விழுந்து தீ விபத்து
ADDED : ஜூன் 03, 2024 01:02 AM

திருப்பூர்:ஊத்துக்குளியில் மொபைல் போன் டவர் மீது இடி விழுந்ததில், ஜெனரேட்டரில் தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பூர் மாநகரம் மற்றும் ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், அவிநாசி என சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை திடீரென இடியுடன் பலத்த மழை பெய்தது. அதில், திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி டவுன், லெப்பை பள்ளி வாசல் வீதியில் அமைந்துள்ள மொபைல் போன் டவரில் இடி தாக்கியது. அதன் காரணமாக, டவரின் ஜெனரேட்டரில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனே அக்கம்பக்கத்தினர், ஊத்துக்குளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற வீரர்கள் தீயை அணைத்தனர். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.