/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வேளாண் சார்ந்த தொழில் இளைஞர்களுக்கு அழைப்பு வேளாண் சார்ந்த தொழில் இளைஞர்களுக்கு அழைப்பு
வேளாண் சார்ந்த தொழில் இளைஞர்களுக்கு அழைப்பு
வேளாண் சார்ந்த தொழில் இளைஞர்களுக்கு அழைப்பு
வேளாண் சார்ந்த தொழில் இளைஞர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 10, 2024 02:57 AM
திருப்பூர்:நிதியுதவி,
வட்டிமானியம், முதலீட்டு மானியத்துடன் வேளாண் சார்ந்த தொழில்
துவங்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களை
தொழில் முனைவோராக்கும் திட்டம், கடந்த 2021 -- 22ம் ஆண்டு முதல்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2024--25 நிதியாண்டில்,
இளநிலை பட்டபடிப்பு படித்த, 100 இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில்
துவங்க, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின்
உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்
(பி.எம்.எப்.எம்.இ.,), வேளாண் உள்கட்டமைப்பு நிதி (ஏ.ஐ.எப்.,) திட்டம்,
வங்கி கடனுதவியுடன் கூடிய வேளாண் சார்ந்த தொழில்
துவங்கப்படவேண்டும். இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவராகவும்,
21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், அரசு மற்றும் தனியார்
நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்கவேண்டியது அவசியம்.
கம்ப்யூட்டர் திறன் பெற்றிருக்க வேண்டும்.
குடும்பத்துக்கு ஒரு
வேளாண் பட்டதாரி மட்டுமே நிதியுதவி பெற தகுதியுள்ளவர். வங்கி கடன்
பெற்று தொழில் செய்வோர், தனி உரிமை நிறுவனராக இருக்கவேண்டும்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ், பட்டப்படிப்பு சான்று, ஆதார்,
ரேஷன்கார்டு, வங்கி பாஸ்புக், வங்கியில் பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம்
ஆகிய ஆவணங்களுடன், அக்ரிஸ்நெட் (Agrisnet) தளத்தில் பதிவு
செய்யவேண்டும்.
துவங்க உள்ள வேளாண் தொழில் சார்ந்த விரிவான திட்ட
அறிக்கை, விரிவான திட்ட அறிக்கையை, சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி
இயக்குனரிடம் சமர்ப்பிக்கவேண்டும். இளைஞர்ஞர்களை வேளாண்
தொழில்முனைவோராக்கும் திட்டத்தில், நிதியுதவி, வட்டிமானியம்
தவிர, விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மொத்த திட்ட
மதிப்பீட்டில், 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்; அதிகபட்சம், ஒரு
லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும்.
திருப்பூர் மாவட்ட இளைஞர்கள்,
இந்த திட்டத்தை பயன்படுத்தி, வேளாண் தொழில் சார்ந்த நிறுவனங்கள்
துவக்க ஆர்வம்காட்டவேண்டும் என, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தி
உள்ளார்.