ADDED : ஜூலை 10, 2024 02:58 AM
திருப்பூர்:திருப்பூர்
மாவட்டத்தில், வருவாய் ஆய்வாளர் ஐந்து பேரை பணியிட மாறுதல் செய்து
கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார். மடத்துக்குளம் தாலுகா
அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரியும்
அசோக்சந்திரகுமார், தாராபுரத்துக்கு நில வருவாய் ஆய்வாளராக
மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
கலெக்டர் அலுவலக 'ஈ' பிரிவு அனிதா,
திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கும், அவிநாசி தாலுகா
அலுவலகத்தில் பணிபுரியும் அனிதா, கலெக்டர் அலுவலக 'ஈ' பிரிவுக்கும்
மாற்றப்பட்டுள்ளனர்.
உடுமலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில்
பணிபுரியும் பாலாஜி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்துக்கும்,
திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் சதீஷ்குமார்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்துக்கும் பணியிட மாறுதல்
செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.