/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பூண்டி நகராட்சி சுற்றுச்சுவர் இடிந்து 15 டூவீலர் சேதம் பூண்டி நகராட்சி சுற்றுச்சுவர் இடிந்து 15 டூவீலர் சேதம்
பூண்டி நகராட்சி சுற்றுச்சுவர் இடிந்து 15 டூவீலர் சேதம்
பூண்டி நகராட்சி சுற்றுச்சுவர் இடிந்து 15 டூவீலர் சேதம்
பூண்டி நகராட்சி சுற்றுச்சுவர் இடிந்து 15 டூவீலர் சேதம்
ADDED : மார் 12, 2025 12:29 AM

அவிநாசி; திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், 15 டூவீலர்கள் சேதம் அடைந்தன.
திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம், 50 ஆண்டு பழமையான கட் டடத்தில், செயல்பட்டு வருகிறது. நகராட்சியாக தரம் உயர்த்திய பின், ராக்கியாபாளையத்தில் புதிய அலுவலகம் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், நகராட்சி அலுவலக சுற்றுச்சுவர் அருகில், டூவீலர் ஸ்டாண்ட் செயல்படுகிறது.
நேற்று காலை நகராட்சி அலுவலகத்தின் பழமையான சுற்றுச்சுவர் பலத்த சத்தத்துடன் விழுந்தது. இதில், அருகிலுள்ள டூவீலர் ஸ்டாண்டில் நிறுத்தியிருந்த, 15 டூவீலர்கள் கடுமையாக சேதம் அடைந்தன. சுவர் விழுந்த நேரத்தில், பொதுமக்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.