/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 1.2 டன் ரேஷன் அரிசி சிக்கியது: ஒருவர் கைது: கார் பறிமுதல் 1.2 டன் ரேஷன் அரிசி சிக்கியது: ஒருவர் கைது: கார் பறிமுதல்
1.2 டன் ரேஷன் அரிசி சிக்கியது: ஒருவர் கைது: கார் பறிமுதல்
1.2 டன் ரேஷன் அரிசி சிக்கியது: ஒருவர் கைது: கார் பறிமுதல்
1.2 டன் ரேஷன் அரிசி சிக்கியது: ஒருவர் கைது: கார் பறிமுதல்
ADDED : மார் 12, 2025 12:46 AM
திருப்பூர்; உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், எஸ்.ஐ.,க்கள் குப்புராஜ், பிரியதர்ஷினி உள்ளிட்டோர் நல்லுார் - கூலிபாளையம் ரோட்டில் வாகன சோதனை நடத்தினர்.
அவ்வழியாக வந்த ஒரு ஆம்னி காரை நிறுத்தி சோதனை நடத்திய போது, அதில் 1,230 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது. அதில் வந்த ராக்கியாபாளையத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், 36, என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். அவர், கூலிபாளையம், வாவிபாளையம், நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள வீடுகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வந்ததும், அதனை வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனைசெய்வதும் தெரிந்தது.
அலெக்ஸ் பாண்டியனை கைது செய்த போலீசார், அரிசி மூட்டைகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.