Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கரும்பு அரவை பதிவு: விவசாயிகளுக்கு அழைப்பு

கரும்பு அரவை பதிவு: விவசாயிகளுக்கு அழைப்பு

கரும்பு அரவை பதிவு: விவசாயிகளுக்கு அழைப்பு

கரும்பு அரவை பதிவு: விவசாயிகளுக்கு அழைப்பு

ADDED : ஜூலை 08, 2024 07:10 AM


Google News
திருப்பூர், : கரும்பு விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, நடப்பு ஆண்டில், அர-வைக்கு பதிவு செய்யலாம் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த மடத்துக்குளம், கிருஷ்-ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. திருப்பூர், திண்டுக்கல், கோவை மாவட்ட விவசாயிகள், ஆண்டு தோறும் கரும்பு பதிவு செய்து, அரவைசெய்வதற்காக, ஆலைக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆலை மிகவும் பழுதாகியிருப்-பதால், விரிவான பராமரிப்பு பணி அவசியமாகி உள்ளது.

இதனால், கடந்த 2023-24ம் ஆண்டில் கரும்பு அரவை நடக்க-வில்லை. அரவை பட்டத்துக்கு பதிவு செய்த கரும்புகளை அரவை செய்ய முடியாவிட்டாலும், கொள்முதல் செய்து பிற சர்க்-கரை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கான தொகையும், மிக விரைவாக பட்டுவாடா செய்து முடிக்கப்பட்-டுள்ளது.

எதிர்வரும், 2024-25ல் அரவை பட்டத்துக்கு, கரும்பு நடவு துவங்கியுள்ளது. இந்நிலையில், கரும்பு விவசாயிகளின் வாழ்வா-தாரத்தை பாதுகாக்கும் வகையில், கரும்பு பதிவை துவக்க வேண்டும்; அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை பராம-ரித்து, முழு வீச்சில் இயக்கத்துக்கு கொண்டுவர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, மாவட்ட விவசா-யிகள் குறைகேட்பு கூட்டத்தில், இதுதொடர்பாக கோரிக்கை எழுந்தது. அதன் எதிரொலியாக, கரும்பு பதிவு விரைவில் துவங்-கப்படுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது: கரும்பு விவசா-யிகள் கோரிக்கையை ஏற்று, கரும்பு அரவைக்கு பதிவு செய்யப்-படும். வரும் அரவை பட்டத்தில், அமராவதி ஆலைக்கு பதிவு செய்யப்படும் கரும்பு, பிற ஆலைகளுக்கு பரிமாற்ற அடிப்ப-டையில் அனுப்பி வைக்கப்படும். அறுவடை செய்ததும், பிற ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே, கரும்பு விவ-சாய உறுப்பினர்கள், இவ்வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது கரும்பு பயிரை, ஆலையுடன் பதிவு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us