/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ மூதாட்டி உதட்டை கடித்து துப்பிய வாலிபர் மூதாட்டி உதட்டை கடித்து துப்பிய வாலிபர்
மூதாட்டி உதட்டை கடித்து துப்பிய வாலிபர்
மூதாட்டி உதட்டை கடித்து துப்பிய வாலிபர்
மூதாட்டி உதட்டை கடித்து துப்பிய வாலிபர்
ADDED : ஜூன் 05, 2025 02:29 AM
ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை அருகே, 64 வயது மூதாட்டியின் உதட்டை, வாலிபர் ஒருவர் கடித்து துப்பினார்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி ஜெயசுந்தரி, 64, கூலித்தொழிலாளி. நேற்று காலை பணிக்கு செல்ல, ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே நின்றிருந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் திடீரென ஜெயசுந்தரியை கட்டி பிடித்து, அவரது உதட்டை கடித்து துப்பினார். அலறி கூச்சலிட்ட ஜெயசுந்தரியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த வாலிபரை பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அந்த வாலிபரை விசாரித்ததில், அவர் அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட விஷ்ணு, 30, என தெரிந்தது. அவரையும், திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர்.