/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ சிக்க வைக்க திட்டமிட்டு சிக்கிய சோகம் 2 ஆயுதப்படை போலீசார் 'சஸ்பெண்ட்' சிக்க வைக்க திட்டமிட்டு சிக்கிய சோகம் 2 ஆயுதப்படை போலீசார் 'சஸ்பெண்ட்'
சிக்க வைக்க திட்டமிட்டு சிக்கிய சோகம் 2 ஆயுதப்படை போலீசார் 'சஸ்பெண்ட்'
சிக்க வைக்க திட்டமிட்டு சிக்கிய சோகம் 2 ஆயுதப்படை போலீசார் 'சஸ்பெண்ட்'
சிக்க வைக்க திட்டமிட்டு சிக்கிய சோகம் 2 ஆயுதப்படை போலீசார் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 09, 2025 04:42 AM
திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, சிறுவன் புகை பிடிப்பது போன்று சமூக வலைதளங்களில் பரவ காரணமாக இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் இருவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த, 102 ரெட்டியூரை சேர்ந்த எட்டு வயது சிறுவன், புகை பிடிப்பது போல் சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன் வீடியோ வைரலானது.
திருப்பத்துார் டவுன் போலீசார் விசாரித்து, வீடியோவை பரப்பிய அத்னான், 20, என்பவரை கைது செய்து விசாரித்தனர். இதில் திருப்பத்துார் மாவட்ட ஆயுதப்படை போலீசில் பணிபுரியும், 102 ரெட்டியூரை சேர்ந்த அசாருதீன், அவரது நண்பர் திருப்பதி இருவரும் சேர்ந்து, சிறுவன் புகை பிடிக்கும் வீடியோவை, அத்னானிடம் கொடுத்து வைரலாக்கியது தெரிந்தது.
அசாருதீனுக்கும் அதே பகுதியை சேர்ந்த இப்ராஹிமுக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் சிறுவன் புகைபிடிக்கும் வீடியோவை இப்ராஹிம் பரப்பியதுபோல், சிக்க வைக்க திட்டமிட்டு பரப்பியுள்ளனர்.
ஆனால் வீடியோ பரவிய நாளில், இப்ராஹிம் வெளிநாட்டில் இருந்ததார். இதையடுத்து ஆயுதப்படை போலீஸ்காரர்கள் அசாருதீன் மற்றும் திருப்பதியை, திருப்பத்துார் எஸ்.பி., ஸ்ரேயா குப்தா, நேற்று 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.