/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.,ஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைதுஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.,ஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது
ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.,ஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது
ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.,ஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது
ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.,ஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது
ADDED : ஜன 02, 2024 06:00 PM
திருப்பத்துார் : திருப்பத்துார் அருகே, ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்.,ஐ உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த கணியம்பாக்கத்தை சேர்ந்தவர் சக்திவேல், 24; இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணியளவில் காட்பாடியிலிருந்து ரயிலில் திருப்பத்துார் சென்றார். அங்கு ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியிலுள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., சென்று கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அங்குள்ள, 'சிசிடிவி' மற்றும் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்தார். அப்போது, ஹைதராபாத்திலுள்ள வங்கி தலைமை அலுவலகத்தில் அலாரம் அடித்துள்ளது. இது குறித்து, திருப்பத்துார் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, திருப்பத்துார் டவுன் ரோந்து போலீசார் சம்பவ இடம் சென்று, ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சக்திவேலை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.