/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ மின்சாரம் தாக்கி டேங்க் ஆப்ரேட்டர் பலி: சடலத்துடன் மறியல் மின்சாரம் தாக்கி டேங்க் ஆப்ரேட்டர் பலி: சடலத்துடன் மறியல்
மின்சாரம் தாக்கி டேங்க் ஆப்ரேட்டர் பலி: சடலத்துடன் மறியல்
மின்சாரம் தாக்கி டேங்க் ஆப்ரேட்டர் பலி: சடலத்துடன் மறியல்
மின்சாரம் தாக்கி டேங்க் ஆப்ரேட்டர் பலி: சடலத்துடன் மறியல்
ADDED : மே 11, 2025 03:10 AM
ஆம்பூர், திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பஞ்சாயத்தில் டேங்க் ஆப்ரேட்டராக விஜய்பிரசாத், 35, பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம், அப்பகுதியில் டேங்கிற்கு தண்ணீர் ஏற்ற மின்மோட்டாரை இயக்கினார். மின்மோட்டார் பழுதானதால், அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அதில் மின்சாரம் தாக்கி பலியானார்.
உயிரிழந்த விஜய்பிரசாத் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி அவரது உறவினர்கள் ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதிப்படி போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது