ADDED : ஜன 02, 2024 11:31 PM

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த வி.எம்.வட்டத்திலுள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவிலில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, ரூபாய் நோட்டுகளால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
சத்குரு சம்ஹார மூர்த்தி
நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சத்குரு சம்ஹார மூர்த்தி கோவில் அமைந்துள்ளது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, சத்குரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் பீடம் முழுதும், 500, 200,100 ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
எதிரிகள், கடன் பிரச்னை தீரவும், வாழ்வில் செல்வம் செழிக்கவும் வேண்டி திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.