/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ரூ. 1 லட்சம் மதிப்புள்ள வெளிமாநில மதுபாக்கெட் கடத்திய 2 பேர் கைதுரூ. 1 லட்சம் மதிப்புள்ள வெளிமாநில மதுபாக்கெட் கடத்திய 2 பேர் கைது
ரூ. 1 லட்சம் மதிப்புள்ள வெளிமாநில மதுபாக்கெட் கடத்திய 2 பேர் கைது
ரூ. 1 லட்சம் மதிப்புள்ள வெளிமாநில மதுபாக்கெட் கடத்திய 2 பேர் கைது
ரூ. 1 லட்சம் மதிப்புள்ள வெளிமாநில மதுபாக்கெட் கடத்திய 2 பேர் கைது
ADDED : ஜன 25, 2024 01:00 PM
வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளி மாநில மது பாக்கெட்டுகளை கடத்திய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, கொத்துார் சோதனைச்சாவடியில், மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் வாணியம்பாடி கலால் போலீசார், நேற்று முன்தினம் இரவு வாகனச்சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்ததில், கர்நாடக மாநிலம், கே.ஜி.எப்., பகுதியிலிருந்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கர்நாடக மதுபாக்கெட்டுகளை கடத்தியது தெரிந்தது. காரில் வந்த, திருப்பத்துார் அடுத்த பாச்சலை சேர்ந்த ராமச்சந்திரன், 27, முத்தனப்பள்ளியை சேர்ந்த சதீஷ், 25, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், மதுபாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த வாணியம்பாடி கலால் போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.