/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/திறமைகளை வளர்த்து கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தல்திறமைகளை வளர்த்து கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
திறமைகளை வளர்த்து கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
திறமைகளை வளர்த்து கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
திறமைகளை வளர்த்து கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : ஜன 04, 2024 09:06 PM
திருப்பத்துார்:''அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, பணியில் புதுப்புது உத்திகள் அல்லது, புதிய பணிகளுக்கு தேவையான திறமைகளை தயார் படுத்த, நாம் எப்போதும் மாணவர் போல பயிற்சி எடுப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்,'' என, 'சந்திரயான்' திட்ட முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
திருப்பத்துார் மாவட்டம், பச்சூரிலுள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், 'அச்சம் தவிர்' என்ற தலைப்பில் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:
விண்வெளி பயணத்தில், வெற்றி கொடுத்த பல நுாறு அறிவியலாளர்களில், 90 சதவீதம் பேர், அரசு பள்ளிகளில் தாய்மொழியில் படித்தவர்கள். எனவே, அரசு பள்ளிகளில் படிப்பது குறை என்னும் அச்சத்தை தவிர்க்க வேண்டும். தாய்மொழிக்கல்வி படிப்பதில் அச்சம் தவிர்க்க வேண்டும்.
தற்போது, 60 வயதில் பணி ஓய்வு என்பது போய், 40, 50 வயதில், பணி ஓய்வு என்பது பல துறைகளில் வழக்கமாகி வருகிறது. ஆண் சம்பாதிக்க, பெண் வீட்டை கவனிக்க என்ற நிலை மாறி, ஆணும், பெண்ணும் அனைத்து துறைகளிலும் சம பங்கு அளிக்கும் நிலை வந்து விட்டது.
இந்த மாறுபாடால், தன் பணியில் ஒரே மாதிரி, அல்லது ஒரே பணியில், ஒருவன் நிலையாக ஆயுள் முழுதும், இல்லாத நிலை உருவாகி உள்ளது. எனவே, தன் பணியில் புதுப்புது உத்திகளை அல்லது புதிய பணிகளுக்கு தேவையான திறமைகளை, தயார் படுத்தியே ஆக வேண்டும்.
இதற்கான மனநிலையை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். அதற்காக நாம் எப்போதும் மாணவராக பயிற்சி எடுப்பதை வழக்கமாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.