/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ பள்ளி கட்டடம் கட்டாததால் கிராம மக்கள் போராட்டம் பள்ளி கட்டடம் கட்டாததால் கிராம மக்கள் போராட்டம்
பள்ளி கட்டடம் கட்டாததால் கிராம மக்கள் போராட்டம்
பள்ளி கட்டடம் கட்டாததால் கிராம மக்கள் போராட்டம்
பள்ளி கட்டடம் கட்டாததால் கிராம மக்கள் போராட்டம்
ADDED : மார் 13, 2025 01:34 AM
வாணியம்பாடி:வாணியம்பாடி அருகே, அரசு பள்ளி கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தும், கட்டடம் கட்டும் பணி துவங்காததால், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்து அலசந்திராபுரம் கிராமத்திலுள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி கட்டடம், மிகவும் பழையது என்பதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது. இதனால், புதிய பள்ளி வகுப்பறை கட்டடம், பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி மாவட்ட நிர்வாகம், 37 லட்சம் ரூபாயை கடந்த, மூன்று மாதங்களுக்கு முன் ஒதுக்கீடு செய்தது. எனினும், இதுவரை எவ்வித பணியும் துவங்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அவர்களிடம், திம்மம்பேட்டை போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டு, மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.