/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/பைக் மீது அரசு பஸ் மோதல்; 2 பேர் பலிபைக் மீது அரசு பஸ் மோதல்; 2 பேர் பலி
பைக் மீது அரசு பஸ் மோதல்; 2 பேர் பலி
பைக் மீது அரசு பஸ் மோதல்; 2 பேர் பலி
பைக் மீது அரசு பஸ் மோதல்; 2 பேர் பலி
ADDED : ஜன 05, 2024 12:01 AM
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், முல்லை நிம்மியம்பட்டையை சேர்ந்தவர்கள் பிரவீன், 27, அருள்குமார், 24. நண்பர்களான இருவரும், திருப்பத்துாரில் யோகா பயிற்சி பெற்று வந்தனர்.
நேற்று காலை, 8:00 மணிக்கு, 'பஜாஜ்' பைக்கில், யோகா பயிற்சி மையத்திற்கு காவாப்பட்டறை கிராமம் அருகே சென்றனர்.
அப்போது, ஆலங்காயத்திலிருந்து எதிரே வந்த அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில், இருவரும், பஸ்சின் முன் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியாகினர். குரிசிலாப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.