/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/முன்னாள் ராணுவ வீரர் பழிக்குப்பழியாக கொலைமுன்னாள் ராணுவ வீரர் பழிக்குப்பழியாக கொலை
முன்னாள் ராணுவ வீரர் பழிக்குப்பழியாக கொலை
முன்னாள் ராணுவ வீரர் பழிக்குப்பழியாக கொலை
முன்னாள் ராணுவ வீரர் பழிக்குப்பழியாக கொலை
ADDED : மே 27, 2025 04:43 AM
ஜோலார்பேட்டை : திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த வணக்கம்பட்டியை சேர்ந்தவர் திம்மராயன், 48; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சக்கரவர்த்தி, 42. உறவினர்களான இருவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
பிப்., 17ம் தேதி, திம்மராயனை, சக்கரவர்த்தி வெட்டி கொன்றார். ஜோலார்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் நிபந்தனை ஜாமினில் வந்த சக்கரவர்த்தி, காஞ்சிபுரம் போலீஸ் ஸ்டேஷனில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, சொந்த ஊருக்கு மனைவியை பார்க்க சென்றார். நேற்று காலை, 7:00 மணிக்கு காஞ்சிபுரம் செல்ல பொன்னேரியில் பஸ் ஏற முயன்ற போது, காரில் வந்த கும்பல், சக்கரவர்த்தியை சரமாரியாக வெட்டினர். தடுக்க வந்த அவரது மனைவி கவுரிக்கும் வெட்டு விழுந்தது. இருவரும் படுகாயமடைந்தனர்.
ஜோலார்பேட்டை போலீசார் இருவரையும், வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சக்கரவர்த்தி உயிரிழந்தார். ஜோலார்பேட்டை போலீசார், ஐந்து பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.