/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/மாடப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் ரூ.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்மாடப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் ரூ.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
மாடப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் ரூ.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
மாடப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் ரூ.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
மாடப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் ரூ.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
ADDED : ஜன 11, 2024 12:25 AM
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், மாடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், இந்தாண்டு இரண்டாவது முறையாக பருத்தி ஏலம் நடந்தது. திருப்பத்துார், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, கந்திலி, வாலாஜா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட, 1,500 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்தனர்.
திருப்பூர், சென்னிமலை, கோவை, அவிநாசி பகுதிகளில் இருந்து, 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள், நுால் மில் உரிமையாளர்கள் போட்டி போட்டு பருத்தி ஏலம் எடுத்தனர். 1 குவிண்டால், 8,400 முதல், 9,000 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்தது. விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.
வரும் மார்ச் வரை, திங்கட்கிழமை தோறும் மாடப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம் நடக்கவுள்ளது. கடந்தாண்டு இந்த சங்கத்தில், 9 கோடி ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்துள்ளது. இந்தாண்டு, 15 கோடி ரூபாய் அளவிற்கு பருத்தி ஏலம் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.