/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/பள்ளி பஸ் தீப்பிடித்து நாசம் உயிர் தப்பிய 44 மாணவர்கள்பள்ளி பஸ் தீப்பிடித்து நாசம் உயிர் தப்பிய 44 மாணவர்கள்
பள்ளி பஸ் தீப்பிடித்து நாசம் உயிர் தப்பிய 44 மாணவர்கள்
பள்ளி பஸ் தீப்பிடித்து நாசம் உயிர் தப்பிய 44 மாணவர்கள்
பள்ளி பஸ் தீப்பிடித்து நாசம் உயிர் தப்பிய 44 மாணவர்கள்
ADDED : ஜன 10, 2024 11:40 PM

வாணியம்பாடி:திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் வாசவி மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளது. அங்கு படிக்கும் மாணவ - மாணவியரை காலையில் வீட்டிலிருந்து அழைத்து சென்று, மாலையில் மீண்டும் வீட்டில் விடுவதற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பள்ளி முடிந்து, நேற்று மாலை 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியரை ஏற்றிக்கொண்டு பள்ளி பஸ் ஆலங்காயத்தில் புறப்பட்டு, வெள்ளக்குட்டை கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்த பஸ்சை டிரைவர் கோவிந்தராஜ், 40, ஓட்டினார். வழியில் சில மாணவ - மாணவியரை இறக்கிவிட்டு சென்று கொண்டிருந்த நிலையில், 44 பேர் பஸ்சில் இருந்தனர். சுண்ணாம்பு பள்ளம் அருகே சென்றபோது பஸ்சில் புகை வந்தது.
டிரைவர் பஸ்சை உடனே நிறுத்தி, அனைத்து மாணவ - மாணவியரையும் அவசரமாக இறக்கி காப்பாற்றினார். அடுத்த சில நொடிகளில் பஸ்சில் தீப்பிடிக்க ஆரம்பித்தது. அந்த வழியே சென்றவர்கள், தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.
ஆலங்காயம் தீயணைப்பு துறை வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் முழுதும் எரிந்து நாசமானது. ஆலங்காயம் போலீசார் விசாரணையில், டீசல் டேங்க் கசிவால் தீப்பிடித்தது தெரியவந்தது.