/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ ஷட்டர் கதவு விழுந்து லாரி டிரைவர் பலி ஷட்டர் கதவு விழுந்து லாரி டிரைவர் பலி
ஷட்டர் கதவு விழுந்து லாரி டிரைவர் பலி
ஷட்டர் கதவு விழுந்து லாரி டிரைவர் பலி
ஷட்டர் கதவு விழுந்து லாரி டிரைவர் பலி
ADDED : ஜூலை 09, 2024 10:58 PM
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரில் எம்.ஏ.ஆர்., தனியார் லாரி பார்சல் சர்வீஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு லாரி டிரைவராக கரும்பூரை சேர்ந்த ஹேம்நாத், 35, பணிபுரிந்து வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்ற அவர், பார்சல்களை டெலிவரி செய்துவிட்டு, லாரியை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விட்டார். அப்போது அலுவலக ஷட்டர் கதவு, இவர் மீது விழுந்ததில் படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஆம்பூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.