ADDED : ஜூலை 09, 2024 08:46 PM
திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் அருகே அங்காநாதவலசையைச் சேர்ந்தவர் வேலாயுதம், 52; இவர், மருத்துவம் படிக்காமல், பிளஸ் 2 மட்டும் படித்து விட்டு, அலோபதி முறையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் சென்றது.
அதன்படி, திருப்பத்துார் மாவட்ட, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் கண்ணகி தலைமையிலான மருத்துவக் குழுவினர் மற்றும் போலீசார், நேற்று சம்பவ இடம் சென்று ஆய்வு செய்தனர்.
அங்கு, நோயாளிகளுக்கு வேலாயுதம் சிகிச்சை அளித்ததை கண்டுபிடித்து, அவரிடமிருந்த ஆங்கில மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பின், போலீசில் புகார் செய்தனர்.
திருப்பத்துார் தாலுகா போலீசார், போலி டாக்டர் வேலாயுதத்தை கைது செய்தனர்.