/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ டி.எஸ்.பி., மீது புகார் அளித்த பெண் தற்கொலை முயற்சி டி.எஸ்.பி., மீது புகார் அளித்த பெண் தற்கொலை முயற்சி
டி.எஸ்.பி., மீது புகார் அளித்த பெண் தற்கொலை முயற்சி
டி.எஸ்.பி., மீது புகார் அளித்த பெண் தற்கொலை முயற்சி
டி.எஸ்.பி., மீது புகார் அளித்த பெண் தற்கொலை முயற்சி
ADDED : ஜூன் 26, 2025 02:28 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி., மீது நெல்லை டி.ஐ.ஜி.,யிடம் புகார் அளித்த இளம்பெண், அளவுக்கு அதிகமான மாத்திரைகளை விழுங்கி, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
துாத்துக்குடி, கங்காபரமேஸ்வரி காலனியைச் சேர்ந்த, 25 வயது இளம்பெண், அப்பகுதி பூங்காவில் நடைபயிற்சி சென்றபோது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.
இது தொடர்பாக, தென்மலை தென்குமரன் என்பவர் மீது, சிப்காட் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலையங்களில் புகார் அளித்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார், தென்குமரனை சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்த அவர், அப்பெண் வீட்டிற்கு சென்று மிரட்டியதாக புகார் எழுந்தது. மேலும், தென்குமரன் புகாரில், அந்த பெண் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அதற்கு துாத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி., சுதீர் உடந்தையாக இருப்பதாகவும், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.,யிடம் அந்த பெண் புகார் அளித்தார். அதற்கு மாவட்ட காவல் துறை மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அந்த பெண், நெஞ்சுவலிக்கு சாப்பிடும், 60 மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டு மயங்கிக் கிடந்தார்.
அவரை மீட்ட உறவினர்கள், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சுயநினைவு இழந்த அந்த பெண், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், 'என் முடிவுக்கு தனிமை, தீராத முதுகுவலி மற்றும் பொய்யான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தது ஆகியவை தான் காரணம்' எனக் குறிப்பிட்டுள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.