/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ ஓடும் ரயிலில் ஏறி விழுந்த நபர் நடைமேடையை உடைத்து மீட்பு ஓடும் ரயிலில் ஏறி விழுந்த நபர் நடைமேடையை உடைத்து மீட்பு
ஓடும் ரயிலில் ஏறி விழுந்த நபர் நடைமேடையை உடைத்து மீட்பு
ஓடும் ரயிலில் ஏறி விழுந்த நபர் நடைமேடையை உடைத்து மீட்பு
ஓடும் ரயிலில் ஏறி விழுந்த நபர் நடைமேடையை உடைத்து மீட்பு
ADDED : ஜூன் 26, 2025 02:39 AM

துாத்துக்குடி:அந்தியோதயா ரயிலில் ஏற முயன்றவர் நடைமேடைக்கும், ரயிலுக்கு இடையில் சிக்கி பரிதவித்த நிலையில், நடைமேடையை உடைத்து பத்திரமாக மீட்கப்பட்டார்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, சாலைப்புதுார் இ.பி. காலனியை சேர்ந்தவர் வீரபிரசாத், 28; திருவாரூரில் உள்ள கூட்டுறவு சொசைட்டி கிளர்க். மனைவி பிருந்தா, ஒன்றை வயது ஆண் குழந்தையுடன் திருவாரூர் செல்வதற்காக, நேற்று வீரபிரசாத் கோவில்பட்டி ரயில் நிலையம் சென்றார்.
சென்னை தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரயிலில் விருதுநகருக்கு சென்று, அங்கிருந்து சென்னை செல்லும் செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் திருவாரூர் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். இரண்டாவது நடைமேடையில் வந்த அந்தியோதயா ரயில் நிற்பதற்குள், வீரபிரசாத் ஏற முயன்றதில், கால் தவறி விழுந்து, நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே சிக்கிக் கொண்டார்.
அங்கிருந்தவர்கள் கூச்சலிட்ட நிலையில் ரயில் நின்றது. வீரபிரசாத் வெளியே வர முடியாமல் சிக்கி பரிதவித்த நிலையில், அவரை மீட்கும் பணியில் ரயில்வே போலீசாரும், ஊழியர்களும் ஈடுபட்டனர். நடைமேடையை உடைத்து, நீண்ட போராட்டத்திற்கு பின், அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
கால் மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால், வீரபிரசாத் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்தியோதயா ரயில், ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.