/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ திருச்செந்துாரில் கடையடைப்பு; அமைச்சரை வியாபாரிகள் முற்றுகை திருச்செந்துாரில் கடையடைப்பு; அமைச்சரை வியாபாரிகள் முற்றுகை
திருச்செந்துாரில் கடையடைப்பு; அமைச்சரை வியாபாரிகள் முற்றுகை
திருச்செந்துாரில் கடையடைப்பு; அமைச்சரை வியாபாரிகள் முற்றுகை
திருச்செந்துாரில் கடையடைப்பு; அமைச்சரை வியாபாரிகள் முற்றுகை
UPDATED : ஜூன் 18, 2025 06:48 AM
ADDED : ஜூன் 18, 2025 01:58 AM

துாத்துக்குடி:திருச்செந்துார் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின், சொத்து வரி அதிகளவில் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, 315 ரூபாய் வாங்கிய இடத்தில் தற்போது, 15 மடங்கு உயர்த்தி, 4,200 ரூபாய் வசூலிக்கப்படுவதாக வியாபாரிகளும், மக்களும் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், சொத்து வரி அதிகரிப்பை கண்டித்து நகரின், 1,500 கடைகளையும் அடைத்து, வியாபாரிகள் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட திரண்டனர். இதற்கிடையே, சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகளை பார்வையிட அமைச்சர் நேரு திருச்செந்துார் வந்தார். அவருடன் கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வந்தனர்.
அவர்கள் தங்கியிருந்த தமிழ்நாடு விடுதிக்கு ஊர்வலமாக சென்ற வியாபாரிகள், அமைச்சர் நேருவை சந்தித்து சொத்துவரி தொடர்பாக பேச முயன்றனர். போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்ததால், சில வியாபாரிகள் போலீசாரையும் மீறி, விடுதிக்குள் சென்று அமைச்சரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வியாபாரிகளிடம், அமைச்சர் நேரு கூறுகையில், ''அரசாணைக்கு உட்பட்டு தான் வரி வசூல் செய்யப்படுகிறது. திருச்செந்துார் நகராட்சியில் வசூலிக்கப்படும் சொத்துவரி குறித்து, நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்தி விபரம் கேட்கப்படும்,'' என்றார். இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றால், கும்பாபிஷேகம் நடக்கும் நாளில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.