/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து
நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து
நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து
நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து
ADDED : ஜூன் 18, 2025 02:26 AM

கோவில்பட்டி:துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து, 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு, கரூர் மாவட்டம், புகளூர் காகித தொழிற்சாலை நோக்கி சரக்கு ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. கடம்பூர் -- கோவில்பட்டி இடையே சென்ற போது, திடீரென ஒரு பெட்டியில் இருந்த நிலக்கரி தீப்பற்றி எரிந்தது.
கடம்பூர் ரயில்வே ஊழியர்கள், சரக்கு ரயிலில் இருந்த கார்டுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். கோவில்பட்டி ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கோவில்பட்டி, கழுகுமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ரயில்வே டிராக்கில் உயர் அழுத்த மின் பாதையில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள், ரயிலில் 17வது பெட்டியில் ஏற்பட்ட தீயை, நீண்ட போராட்டத்திற்கு பின் அணைத்தனர்.
இந்த விபத்து காரணமாக, கோவில்பட்டி வழியாக இரு மார்க்கங்களிலும் செல்லும் ரயில்கள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.