/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ பள்ளி வேன் கவிழ்ந்து 5 குழந்தைகள் உள்ளிட்ட ஏழு பேர் படுகாயம் பள்ளி வேன் கவிழ்ந்து 5 குழந்தைகள் உள்ளிட்ட ஏழு பேர் படுகாயம்
பள்ளி வேன் கவிழ்ந்து 5 குழந்தைகள் உள்ளிட்ட ஏழு பேர் படுகாயம்
பள்ளி வேன் கவிழ்ந்து 5 குழந்தைகள் உள்ளிட்ட ஏழு பேர் படுகாயம்
பள்ளி வேன் கவிழ்ந்து 5 குழந்தைகள் உள்ளிட்ட ஏழு பேர் படுகாயம்
ADDED : செப் 11, 2025 03:48 AM

துாத்துக்குடி:சாலையோரத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில், ஐந்து குழந்தைகள் உட்பட, ஏழு பேர் காயமடைந்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பல்லாக்கு சாலையில் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி செயல்படுகிறது.
பள்ளிக்கு சொந்தமான வாகனம், மந்தித்தோப்பு பகுதியில் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பாண்டவர்மங்கலம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது.
தெற்கு அச்சங்குளத்தைச் சேர்ந்த முத்துராஜ், 34, என்பவர் வேனை ஓட்டி சென்றார்.
பாண்டவர்மங்கலம் கிராம பகுதியில் உள்ள கண்மாய் கரையில் வேன் சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்ற டிராக்டரை கடந்து செல்வதற்காக பள்ளி வாகனத்தை டிரைவர் முத்துராஜ் சாலையோரமாக ஒதுக்கியதாக கூறப்படுகிறது.
எதிர்பாராத விதமாக கண்மாய் கரையின் ஓரத்தில் இருந்த மண் சரிந்து, வாகனம் அருகில் உள்ள நிலத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில், டிரைவர் முத்துராஜ், வாகனத்தில் வந்த குழந்தைகள் பராமரிப்பாளர் ருக்மணி, ஐந்து குழந்தைகள் உட்பட, ஏழு பேர் காயமடைந்தனர். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.