/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ ஆம்னி பஸ்சில் அனுப்பிய 52 சவரன் நகைகள் மாயம் ஆம்னி பஸ்சில் அனுப்பிய 52 சவரன் நகைகள் மாயம்
ஆம்னி பஸ்சில் அனுப்பிய 52 சவரன் நகைகள் மாயம்
ஆம்னி பஸ்சில் அனுப்பிய 52 சவரன் நகைகள் மாயம்
ஆம்னி பஸ்சில் அனுப்பிய 52 சவரன் நகைகள் மாயம்
ADDED : செப் 11, 2025 03:36 AM
துாத்துக்குடி:ஆம்னி பஸ்சில் கொடுத்து அனுப்பிய, 52 சவரன் நகைகள் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தை சேர்ந்த தங்க நகை வியாபாரி செய்யது அபுதாகீர், தங்க நகை விற்பனை கடை நடத்துகிறார். இவரது நண்பரான வியாபாரி ஆரிஸ் என்பவர், சென்னையில் இருந்து உடன்குடி செல்லும் திருமலைவாசன் என்ற தனியார் ஆம்னி பஸ்சில், நேற்று முன்தினம், 52 சவரன் நகைகளை பார்சலில் கொடுத்து அனுப்பினார்.
செய்யது அபுதாகீர், நேற்று காலை ஆறுமுகநேரிக்கு சென்று, ஆம்னி பஸ்சில் பார்சலை கேட்டார். பஸ்சில் பார்சல் இல்லாததை அறிந்தவர், பஸ் டிரைவர்களிடம் கேட்டார். அவர்கள், முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர்.
முகம்மது அபுதாகீர் புகாரில், ஆறுமுகநேரி போலீசார், ஆம்னி பஸ் டிரைவர்களிடம் விசாரிக்கின்றனர்.