/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/வீட்டில் தனியாக இருந்த சிறுவன் கழுத்தில் கத்தியால் குத்தி கொலைவீட்டில் தனியாக இருந்த சிறுவன் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை
வீட்டில் தனியாக இருந்த சிறுவன் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை
வீட்டில் தனியாக இருந்த சிறுவன் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை
வீட்டில் தனியாக இருந்த சிறுவன் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை
ADDED : ஜன 10, 2024 11:42 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடற்கரை கிராமம் வேம்பாரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் அஸ்வின் குமார், 7. அங்குள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்தார். கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் வீட்டில் இருந்தார்.
தந்தை கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டார். தாய், மகளிர் சுயஉதவிக்குழு கூட்டத்திற்கு சென்று விட்டார். நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த சிறுவன், கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சம்பவம் நடந்த முத்துக்குமாரின் வீடு, கடலோர போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்புறம் உள்ளது. போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தடயவியல் நிபுணர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். அந்த ஊரில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலுக்கு செல்பவர்கள்.
காலையில் அனைவரும் தொழிலுக்கு சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தனியே இருந்த சிறுவன் ஏன் கொலை செய்யப்பட்டார் என போலீசார் விசாரித்தனர்.
அப்போது, வீட்டில் அருகே குடியிருக்கும் கஞ்சா அருந்தும் நபர் ஒருவர் மீதான சந்தேகத்தில் அவரை பிடித்து விசாரித்தனர்.
ஓரினச்சேர்க்கை காரணமாக, அந்த சிறுவனை அவர் கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.