/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ டூ வீலர் மீது கார் மோதல் இரு தொழிலாளர்கள் பலி டூ வீலர் மீது கார் மோதல் இரு தொழிலாளர்கள் பலி
டூ வீலர் மீது கார் மோதல் இரு தொழிலாளர்கள் பலி
டூ வீலர் மீது கார் மோதல் இரு தொழிலாளர்கள் பலி
டூ வீலர் மீது கார் மோதல் இரு தொழிலாளர்கள் பலி
ADDED : ஜூன் 11, 2024 07:52 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் குமார வெங்கடேசன், 53. கீழத்தெருவை சேர்ந்தவர் பொன் மாடசாமி, 43; கூலி தொழிலாளிகளான இருவரும் ஊரில் இருந்து டூ வீலரில் எட்டையபுரத்துக்கு நேற்று சென்றனர். குமார வெங்கடேசன் ஓட்டி சென்றார்.
முத்தலாபுரம் பாலம் அருகே சென்றபோது, அங்குள்ள ஒரு கடைக்கு செல்வதற்காக டூ வீலரை சாலையோரத்தில் நிறுத்தியபடி நின்றுள்ளனர். அப்போது, திண்டுக்கல்லில் இருந்து துாத்துக்குடி நோக்கி சென்ற மாருதி பிரீசா கார் நின்று கொண்டிருந்த டூ வீலரில் மோதியது.
இதில், துாக்கி வீப்பட்ட குமார வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த பொன் மாடசாமி துாத்துக்குடி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். எட்டையபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விபத்து தொடர்பாக, திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னா நகரை சேர்ந்த முகமது சுமைல், 48, என்பவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். டீக்கடை சிசிடிவி கேமராவில் பதிவான இந்த விபத்து காட்சிகள் தற்போது சமூக வலைதலங்களில் பரவி வருகிறது.