/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ கோவில்பட்டி ரேஷன் கடையில் கல் கலந்த கோதுமை விநியோகம் கோவில்பட்டி ரேஷன் கடையில் கல் கலந்த கோதுமை விநியோகம்
கோவில்பட்டி ரேஷன் கடையில் கல் கலந்த கோதுமை விநியோகம்
கோவில்பட்டி ரேஷன் கடையில் கல் கலந்த கோதுமை விநியோகம்
கோவில்பட்டி ரேஷன் கடையில் கல் கலந்த கோதுமை விநியோகம்
ADDED : ஜூன் 11, 2024 08:02 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி நகர் யோகிஸ்வரர் திருமண மண்டபம் அருகே செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை கோதுமை உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
மக்களுக்கு வழங்கப்பட்ட கோதுமையில் மண் மற்றும் கல் ஆகியவை அதிகமாக இருந்துள்ளது. ரேஷன் கடை ஊழியர்களிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். அவர் சரியான பதில் கூறவில்லை என்பதால் ஆத்திரமடைந்த மக்கள் கோவில்பட்டி தாலூகா அலுவலகத்திற்கு சென்றனர்.
தாசில்தார் சரவண பெருமாளிடம் தங்களுக்கு வழங்கப்பட்ட கோதுமையை காண்பித்து அவர்கள் முறையிட்டனர். உடனடியாக கோதுமையை மாற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் சரவணபெருமாள் உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.