/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ ரோட்டோரம் நின்ற இருவர் கார் மோதியதில் பலி ரோட்டோரம் நின்ற இருவர் கார் மோதியதில் பலி
ரோட்டோரம் நின்ற இருவர் கார் மோதியதில் பலி
ரோட்டோரம் நின்ற இருவர் கார் மோதியதில் பலி
ரோட்டோரம் நின்ற இருவர் கார் மோதியதில் பலி
ADDED : ஜூன் 12, 2024 02:52 AM
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரத்தைச் சேர்ந்தவர்கள் குமார் வெங்கடேசன் 53, மற்றும் பொன் மாடசாமி 42. இவர்கள் விவசாயிகள்.
எட்டயபுரத்திற்கு டூவீலரில் சென்றனர். நேற்று மாலை 5:00 மணிக்கு முத்தலாபுரம் பாலம் அருகே டூவீலரை ரோட்டின் ஓரமாக நிறுத்தி விட்டு கடைக்கு செல்ல நின்றனர்.
அப்போது திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார் ரோட்டோரம் நின்ற அவர்கள் மீது மோதியது. இதில் குமார் வெங்கடேசன் சம்பவயிடத்தில் இறந்தார்.
அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பொன் மாடசாமி இறந்தார். எட்டயபுரம் போலீசார் விசாரித்தனர். காரை ஓட்டிய திண்டுக்கல் ஜின்னாநகரைச் சேர்ந்த முகமது இஸ்மாயிலை போலீசார் கைது செய்தனர்.