/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ குற்றவாளிக்கு துணை போன இன்ஸ்பெக்டர் இடமாற்றம் குற்றவாளிக்கு துணை போன இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
குற்றவாளிக்கு துணை போன இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
குற்றவாளிக்கு துணை போன இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
குற்றவாளிக்கு துணை போன இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
ADDED : ஜூன் 20, 2024 02:42 AM

கோவில்பட்டி:கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த். இவர், குற்றவாளிகளுக்கு துணை போகும் வகையில் செயல்படுவதாக மக்கள் குற்றம்சாட்டினார். அப்பகுதியில், ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில், வழக்கறிஞர் மாரிசெல்வம் என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது.
அதில், முக்கிய குற்றவாளியான தி.மு.க., பிரமுகர் பாம்பு கார்த்திக்கிற்கு துப்பு கொடுத்ததாக போலீசார் ராம்சுந்தரம், ஜெய்கணேஷ் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் மொபைல் போனை ஆய்வு செய்தபோது, பாம்பு கார்த்திக் குடும்பத்துடன் தொடர்பில் இருந்தது தெரிந்தது. அப்போது அவர்கள், 'இதற்கும் எங்களுக்கு தொடர்பு இல்லை; இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் சொல்லி தான் செய்தோம்' என்றனர். அதன் அடிப்படையில் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.