/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1.16 லட்சம் பறிமுதல் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1.16 லட்சம் பறிமுதல்
போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1.16 லட்சம் பறிமுதல்
போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1.16 லட்சம் பறிமுதல்
போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1.16 லட்சம் பறிமுதல்
ADDED : ஜூன் 20, 2024 02:58 AM

கோவில்பட்டி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. துாத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., பீட்டர் பால்துரை தலைமையில், 12 பேர் குழுவினர் நேற்று அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத் மற்றும் அலுவலக ஊழியர்களிடம், பூட்டப்பட்ட அறையில் விசாரணை நடந்தது. காலை 11:30 மணிக்கு துவங்கிய சோதனை இரவு 8:30 மணி வரை நீடித்தது.
அலுவலகத்தின் உள்ளே இருந்த புரோக்கர்கள், டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள், ஆம்னி பஸ், மினி பஸ்களின் உரிமையாளர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்த அலைபேசிகள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.சோதனையின்போது, கணக்கில் வராத 1.16 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் கூறினர். இருப்பினும் யாரும் கைது செய்யப்படவில்லை.