/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ தந்தையை கொன்ற மகன் குண்டர் சட்டத்தில் கைது தந்தையை கொன்ற மகன் குண்டர் சட்டத்தில் கைது
தந்தையை கொன்ற மகன் குண்டர் சட்டத்தில் கைது
தந்தையை கொன்ற மகன் குண்டர் சட்டத்தில் கைது
தந்தையை கொன்ற மகன் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஜூலை 17, 2024 10:31 PM
தூத்துக்குடி:துாத்துக்குடியில் சொத்து தகராறில் தந்தையை கார் ஏற்றி கொலை செய்த மகன் உட்பட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடிமாவட்டம் புளியம்பட்டி அருகே ஆலந்தாவை சேர்ந்தவர் கருப்பசாமி, 79. இவரது மகன் சின்னதுரை, 45. சொத்துக்களை பிரித்து தராத தந்தையை சின்னத்துரை, ஜூன் 24ல் கார் ஏற்றி கொலை செய்தார். அவர் கைது செய்யப்பட்டார்.
தருவைகுளம் பட்டினமருதூரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 57. முன்விரோதத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவர் சண்முகசுந்தரத்தை கொலை செய்தார். இளையராஜா கைது செய்யப்பட்டார். இளையராஜா மற்றும் சின்னத்துரை ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., பாலாஜி சரவணன் பரிந்துரையில் கலெக்டர் லட்சுமிபதி நேற்று உத்தரவிட்டார்.