Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ அறுந்து கிடந்த ஒயரை மிதித்த விவசாயி மின்சாம் தாக்கி பலி * இழப்பீடு கோரி மக்கள் முற்றுகை

அறுந்து கிடந்த ஒயரை மிதித்த விவசாயி மின்சாம் தாக்கி பலி * இழப்பீடு கோரி மக்கள் முற்றுகை

அறுந்து கிடந்த ஒயரை மிதித்த விவசாயி மின்சாம் தாக்கி பலி * இழப்பீடு கோரி மக்கள் முற்றுகை

அறுந்து கிடந்த ஒயரை மிதித்த விவசாயி மின்சாம் தாக்கி பலி * இழப்பீடு கோரி மக்கள் முற்றுகை

ADDED : ஜூலை 17, 2024 09:38 PM


Google News
கயத்தாறு:கயத்தாறு தாலுகா திருமங்கலங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பரமசிவன் மகன் மாரிமுத்து, 55, விவசாயி. நேற்று காலை, தாயுடன் தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அறுந்து கிடந்த மின் ஒயரை மாரிமுத்து மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி மாரிமுத்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், இறந்து விட்டதாக தெரிவித்தார். மாரிமுத்து குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி புரட்சி பாரதம் இயக்க மாவட்ட செயலர் லெனின் தலைமையில் கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

தாசில்தார் நாகராஜன், இன்ஸ்பெக்டர் திருமுருகன், எஸ்.ஐ., தமிழ்ச்செல்வன் பேச்சு நடத்திய பின், அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us